முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோரம்பள்ளம்  குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோரம்பள்ளம்  குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் மறவன் மடம் அந்தோணியார்புரம், கோரம்பள்ளம், மாதவன் நகர், சோரீஸ்புரம், துரைகனி நகர், தப்பிக்கைமீண்டான் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கேண்டியனுக்கு வந்த சோரீஸ்புரம் சுடலை முத்து மகன் ராஜா,(12)  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

 இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டனர். தற்போது அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.