தற்போதைய செய்திகள்

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் இயற்கை உரங்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரமேஷ் கல்யாண்

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி. பெரும்படையார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் அண்மையில் பெய்த பருவ மழையால் நெல் நடவு உள்ளிட்ட விவசாய பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெறுகிறது. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், மண் வளம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் இயற்கை முறை விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகள் விரும்புகின்றனர்.

இதற்காக  வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் ஆகிய இயற்கை உரங்கள் அவசியத்தேவையாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இயற்கை உரங்களை கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT