முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்ற 4 பேர் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விராலிமலை அருகே பல்வேறு பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோமங்கலம் ஏ. பெருமாள்(46) கல்குடி து. அய்யப்பன்(40) பெருமாப்பட்டி ஏ. மகாமுனி(39) சித்திரம்பட்டி க. மாமுண்டி(51)  உள்ளிட்ட 4 பேரும் அரசு மதுபான பாட்டில்களை அனுமதியின்றி பெட்டிக்கடையில் பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததாக விராலிமலை போலிஸார்  கைது செய்தனர். அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.