முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:51 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், இந்திய அரசு மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்த தெருமுனை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

கொள்ளுர்பட்டி தெருவில் ஆரம்பித்து கீழப்பட்டி, சந்தப்பேட்டை, பேருந்து நிலையம், ரைட்டன்பட்டி, சீனியாபுரம் ஆகிய பகுதியில் இந்த தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் பா.புனிதன் உரையாற்றினார்.

பிரச்சாரத்தில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில துணைச் செயலாளர் சதுரகிரி, மாவட்ட பொருளாளர் மனிதநேயன், மாவட்ட துணைச் செயலாளர் சதுரகிரி, வணிகர் அணிச் செயலாளர் வல்லரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →