முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2340 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.15.80 லட்சத்திற்கு உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டத்தில் சனிக்கிழமை...

தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2340 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.15.80 லட்சத்திற்கு உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டத்தில் சனிக்கிழமை...

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:56 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2340 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.15.80 லட்சத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நீதிமன்றங்களில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி மற்றும் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.வசந்தி ஆகியோர் தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.பத்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நம்பிராஜன், நீதித்துறை நடுவர் எண் 2 பசும்பொன் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நகராட்சி, மின்வாரியம், தொலைபேசி, குடிநீர், சிவல் வழக்குகள், பிறப்பு-இறப்பு வழக்குகள், தொழிலாளர் துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் என 2550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 2340 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.15,80,950-க்கு உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும் வங்கிகளில் வராக் கடன்களாக உள்ள 1560 மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 171 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1,08,20,075-க்கு உத்தரவு வழங்கப்பட்டு, ரூ.13,56,680 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

முடிவில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நிர்வாக அதிகாரி பேச்சியப்பன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →