முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் திறப்பு: மக்களுக்கு பாதிப்பில்லை

நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில்  புதுச்சேரியில் புதன்கிழமை மருந்துக் கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்பின்றி தங்களுக்குத்தேவையான மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில்  புதுச்சேரியில் புதன்கிழமை மருந்துக் கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்பின்றி தங்களுக்குத்தேவையான மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் ஈ பார்மஸி திட்டத்திற்கு எதிர்ப்பு மருந்துக் கடை உரிமையாளர்கள், மருந்தாளுநர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் படி மருந்து, மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பது தவறானது என மருந்து கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் விற்பனை மூலம் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகரிப்பதுடன், தரமில்லாத போலி மருந்துகள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

8 லட்சம் கடைஉரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 14-ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு நடத்தப்படும் என அகில இந்திய மருந்துக் கடைக்காரர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும்

புதன்கிழமை மருந்துக் கடையடைப்பு போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் தடை உத்தரவு மக்களை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் மருந்துக் கடைகள், மருந்தகங்களை உரிமையாளர்கள், மருந்தாளுநர்கள் மூடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தடை உத்தரவு பிறப்பித்தார்,

இந்நிலையில் புதுச்சேரியில் மருந்துக் கடைகள், மருந்தகங்கள் மூடப்படாது என விற்பனையாளர்கள் தரப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் கடையடைப்பு நடத்தப்படும் என்ற ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளையும் அகற்றி விட்டனர்.

இதன்படி புதுவையில் 495 மருந்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனால்புதுச்சேரியில்  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை சிரமமின்றி வாங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.