தற்போதைய செய்திகள்

சரத்குமார் அணிதான் வெற்றிபெரும்: நாடக கலை கழகத் தலைவர் சண்முகவடிவேலு

நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் அணிதான் வெற்றிபெரும் என கோவை மாவட்ட நாடகக்கலைக் கழகத்தலைவர் சி.எஸ்., சண்முகவடிவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமணி

நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் அணிதான் வெற்றிபெரும் என கோவை மாவட்ட நாடகக்கலைக் கழகத்தலைவர் சி.எஸ்., சண்முகவடிவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சண்முகவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடிகர் திலகம், புரட்சித்தலைவர், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் ஆகியோர் முயற்சியால்தான் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டது. நடிகர் சங்க தலைவராக சரத்குமார் அவர்கள் பொறுப்பேற்றபின்தான் நடிகர் சங்க கட்டட கடன் அடைக்கப்பட்டது. நடிகர் சங்கத்தில் பெறும்பான்மையாக உள்ள நாடக நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது, அவர்களை நடிகர் சங்கத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என ஒரு பிரிவு திரைப்பட நடிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தபோது சரத்குமார்தான் நாடக நடிகர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். இதை நாடக நடிகர்கள் மறக்கமாட்டார்கள்.

முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது சிக்கல் ஏற்பட்டபோதும், தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டபோதும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் சரத்குமார்.

ரஜினி, கமல், சத்தியராஜ், விஜய், அஜித் ஆகிய முன்னனி நடிகர்களால் பாராட்டப்பட்டவர் சரத்குமார். இப்படி பலரின் ஆதரவையும், எங்கள் ஆதரவையும் பெற்ற சரத்குமார் அணிதான் நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றிபெரும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT