புதுவையில் அதிமுக 44-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 44-வது ஆண்டு தொடக்க விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநில செயலாளர் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொடியேற்றினார்.

பின்னர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அவைத்தலைவர் எம்.பாண்டுரங்கன், இணைச்செயலர் மகாதேவி, துணைச்செயலர்கள் லக்கி பெருமாள், பன்னீர்செல்வி, பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், எம்.எல்.ஏக்கள் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகர், எல்.பெரியசாமி,
எஸ்.பாஸ்கர், நகர செயலர்கள் அன்பானந்தம், ரவீந்திரன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் அமைச்சர்கள் எ.காசிலிங்கம், என்.வெங்கடசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழக கொடியேற்றி ,பட்டாசு வெடித்து ,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதே போல் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, மணவெளி, ஊசுடு, ஏம்பலம், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர்,லாஸ்பேட்டை, காமராஜர் நகர், காலாப்பட்டு, திருபுவனை, மண்ணாடிப்பட்டு,பாகூர், உருளையன்பேட்டை, மங்கலம், கதிர்காமம், உழவர்கரை, வில்லியனூர்,தொகுதிகளிலும் அதிமுக தொடக்க விழா கொண்டாடப்பட்டது. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.