முகப்பு
தற்போதைய செய்திகள்

லாஸ்பேட்டையில் கட்டட ஒப்பந்ததாரர் சடலம்: உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் கட்டட ஒப்பந்ததாரர் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் கட்டட ஒப்பந்ததாரர் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

பெரும்பாலான கல்வி நிலையங்கள் உள்ள லாஸ்பேட்டை விமான சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு திங்கள்கிழமை காலை தனியார் மதுபானபார் அருகே நடுத்தர வயதைச் சேர்ந்தவர் சடலம் தனியார் மதுபான பார் அருகே கிடந்தது.

இதையடுத்து கோரிமேடு போலீஸôர் சம்பவ இடத்துக்கு வந்து மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் புருஷோத்தமன் (49) எனத் தெரிந்தது. உறவினர்கள் சாலை மறியல்

தனியார் மதுபான பார் ஊழியர்கள் தான் புருஷோத்தமனை கொலை செய்திருக்கக் கூடும். எனவே இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்ய

வேண்டும் எனக்கூறி உறவினர்கள் விமான நிலைய சாலையில் மறியல் செய்தனர். ஏற்கெனவே அந்த தனியார் மதுபான பாரில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் புகார் கூறினர்.

இதற்கிடையே போலீஸôர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சந்தேக மரண வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர். பிரதேப் பரிசோதனையில் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் தெரியவந்தால், கொலை

வழக்காக மாற்றப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தனியார் மதுபானக் கூடத்தில் இரவு மது அருந்திய நிலையில் அவர் அதிக போதை ஏறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸôர் கருதுகின்றனர். மறியலால் விமான நிலைய சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.