தற்போதைய செய்திகள்

சிறிரங்கம் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: யாக சாலை பூஜைகள் இன்று தொடக்கம்

திருச்சி சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் முதல் கட்ட மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாக சாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்குகின்றன.

கு. வைத்திலிங்கம்

திருச்சி சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் முதல் கட்ட மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாக சாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்குகின்றன.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் சம்ப்ரோக்ஷணம் நடத்த அரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.18 கோடியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. 165 ஏக்கர் பரப்பளவையும், 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களை உள்ளடக்கிய இத்திருக்கோயிலில் முதல் கட்டமாக 43உப சன்னதிகள், 11 கோபுரங்களில் முதல் கட்ட சம்ப்ரோக்ஷணத்தை செப்டம்பர் 9-ம் தேதி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி திருக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்குகின்றன.  யாகசாலை மண்டபத்தில் திருவிளக்கு ஏற்றி இறை அனுமதி பெறுதலுடன் தொடங்கி, வாசுதேவ புண்யாஹவாசனம், விக்னேசுவர ஆராதனம், வாஸ்துசாந்தி, பாலிகை பூஜை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், வேத, திவ்ய பிரபந்தம் தொடக்கம் நடைபெறுகிறது. இப்பூஜைகளுக்குப் பின்னர் சோம கும்ப பாலிகா கடிகா சராவஸ்தாபனமும், துவாரகடிகா கும்ப ஸ்தபானமும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 8-ம் தேதி காலை காவிரி நீர் கொண்டு வருதலும், தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மகா கும்ப யாக சாலை பிரவேசமும் நடைபெறுகிறது.  மாலை 4.30 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜையும், இரவு 7 மணி முதல் நான்காம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.

செப்டம்பர் 9-ம் தேதி காலை விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளியெழுச்சிக்குப் பின்னர், மகாசாந்தி ஹோமாதிகள், மகா பூர்ணாஹுதி , தஸதானம், யாத்ராதான பூஜைகள் நடைபெற உள்ள.  காலை 5.15 மணிக்கு கடங்கள் வேத கோஷங்களுடன் புறப்பாடும்,காலை 6.30 மணிக்கு 11  கோபுரங்கள்,43 உப சன்னதிகளுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு வேத, பிரபந்த சாற்றுமுறையும், காலை 8 மணிக்கு கோஷ்டி, மரியாதைகளும் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT