முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய விளையாட்டு ஆணைய புதுவை விடுதி மேம்பாட்டுப் பணி: இன்று துவக்கம்

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) புதுச்சேரி விளையாட்டு விடுதி மேம்பாட்டுப்பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:39 AM
பகிர்:

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) புதுச்சேரி விளையாட்டு விடுதி மேம்பாட்டுப்பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் சாய் விளையாட்டு விடுதி

இயங்கி வருகிறது. இங்கு வாலிபால், ஹாக்கி, கோ.கோ, ஹேண்ட்பால், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், கபாடி, உள்பட பல்வேறு விளையாட்டுகளில் 107-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்விடுதியின் மேம்பாட்டுப்பணிக்காக சாய் ரூ.18.4 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.இதன் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் தி.தியாகராஜன் பணிகளை துவக்கி வைக்கிறார்.

சாய் இயக்குநர் ஜெனரல் இன்ஜெட்டி சீனிவாஸ் சிறப்புரை ஆற்றுகிறார். பள்ளிக் கல்வி இயக்குநர் ல.குமார், கேரள, தமிழகம், புதுச்சேரி சாய் மண்டல இயக்குநர் டாக்டர் ஜி.கிஷோர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதன் ஏற்பாடுகளை பயிற்சி மைய அலுவலர் கு.முத்துக்கேசவலு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.