முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பகலில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி ரூ.11 லட்சம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் கத்தி முனையில்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பகலில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி ரூ.11 லட்சம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் கத்தி முனையில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:44 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று மதியம் வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் ரூ.11 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துச்சாமி (47). இவரது மனைவி திருவளர்செல்வி (35). இவர்களுக்கு சத்தியநாராயணன் (7), பாலமுருகன் (4) என்ற இரு மகன்கள் உண்டு. ராணுவ வீரரான முத்துச்சாமி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இதற்கான பண பலன்கள் வந்துள்ளது. இதனை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் எடுக்க இருவரும் சென்றுள்ளார்கள். பணம் ரூ.11 லட்சத்தை எடுத்து மனைவியிடும் கொடுத்துவிட்டு, ராமசாமி ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே இருந்துள்ளார். திருவளர்செல்வி மினி பேருந்தில் பெருமாள்தேவன்பட்டிக்கு பணத்துடன் வந்து இறங்கி, வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர் உள்ளே சென்ற 15 நிமிடத்தில் கதவை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் தட்டியுள்ளார். அண்ணன் இருக்கிறார்களா? என்று கேட்டுக் கொண்டே திருவளர்செல்வி கதவைத் திறந்தவுடன் உள்ளே சென்று கதவைப் பூட்டியுள்ளார். வங்கியிலிருந்து பணம் எடுத்துவந்தது தெரியும். பணத்தை எடுத்துத் தரக் கேட்டு, பென்சில் சீவும் சிறிய கத்தியை திருவளர்செல்வியின் கழுத்தில் வைத்துள்ளார். பின்னர் பீரோவிலிருந்த பணப் பையை திருவளர்செல்வி, அந்த கொள்ளையனிடம் கொடுத்துள்ளார். கொள்ளையன் சென்ற சற்று நேரத்தில் வெளியே சென்று திருவளர்செல்வி கூச்சலிட்டுள்ளார். அதற்குள் அந்த இளைஞர் தப்பிவிட்டார்.

வந்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தை பெருமாள்தேவன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவைத்துவிட்டு, இவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வந்த வழியே திரும்பிச் சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருவளர்செல்வியின் கழுத்தில் உள்ள செயின் உள்ளிட்டவற்றை வந்த நபர் பறித்துச் செல்லாமல் இருப்பது உள்ளிட்டவை போலீஸாருக்கு உண்மையிலேயே பணம் பறிபோனதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் திருவளர்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →