முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்டாக் மாணவர் சேர்க்கை மோசடியை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்டாக் மாணவர் சேர்க்கை மோசடியை கண்டித்து புதுச்சேரியில் இன்று செவ்வாய்க்கிழமை  முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

சென்டாக் மாணவர் சேர்க்கை மோசடியை கண்டித்து புதுச்சேரியில் இன்று செவ்வாய்க்கிழமை  முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது.

புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் மற்றும் சென்டாக் மாணவர்கள் பாதுகாப்புக் குழு இணைந்து சென்டாக் மோசடி தொடர்பாக புதுவை அரசை கண்டித்தும் அதிக கல்வி கட்டணம், நன்கொடை வசூலிக்கும் தனியார் கல்லூரிகளை கண்டித்தும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், தொழிற்சங்கம் ஆகியோரிடம் ஆதரவு திரட்டியுள்ளனர்.

காங்கிரஸ், திமுக, பாரதிய ஜனதா, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஐஜேகே, லோக்ஜனசக்தி, நாம் தமிழர், திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழர் தேசிய இயக்கம், தலித்சேனா, தமிழர் களம், இந்து முன்னணி, பாரதமாதா டெம்போ உரிமையாளர் சங்கம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

இதனால் புதுச்சேரியில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.