மெக்கா விபத்து: திருச்சியைச் சேர்ந்த ரேனிஜா பலி
மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 இந்தியர்கள் உள்பட 717 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரில் திருச்சியைச் சேர்ந்த ரேனிஜா என்பர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 இந்தியர்கள் உள்பட 717 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரில் திருச்சியைச் சேர்ந்த ரேனிஜா என்பர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி தென்னூர் அண்ணாநகர் மெயின் சாலை உக்கிரகாளி அம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் ரேனிஜா 51. இவரின் கணவர் முகமது அமானுல்லா 58, மகள் நிசாத் 35, அவரின் கணவர் அமானுல்லா 37.
இவர்கள் நான்கு பேரும் கடந்த 1-ம் தேதி திருச்சியில் இருந்து மெக்கா செல்லும் குழு மூலம் மெக்காவுக்கு வந்துள்ளனர். ஹஜ் புனித பயணம் முடித்துக்கொண்டு அக்டோபர் 10ம் தேதி ஊர் திருப்புவதாக இருந்தனர்.
Advertisement
ஆனால் துரதிஷ்டவசமாக மெக்காவில் நேற்று நடந்த விபத்தில் ரேனிஜா நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகள் நிசாத் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஹஜ் புனித பயணத்தின் போது இறந்தது, சோகத்தை ஏற்படுத்தினாலும் ஆண்டவருடைய திருவடி நிழலில் உயிரிழந்தது அவர் செய்த பாக்கியம் என்று ரேனிஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல் ஹஜ்யில் அடக்கம் செய்யப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.