முகப்பு
தற்போதைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்தாண்டுக்கான மண்டலப் பூஜை நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. எனவே இந்தாண்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கான

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்தாண்டுக்கான மண்டலப் பூஜை நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. எனவே இந்தாண்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் மாதம் 2 ஆவது வாரம் தொடங்கப்படும்.

பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலப் பூஜை இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெறும். நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை பக்தர்களுக்காக திறக்கப்படும். கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட தொடங்கும் பக்தர்களுக்கு, மண்டலப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகை தருவார்கள்.

கூட்டத்தை நெரிப்படுத்தும் பொருட்டு கட்டணமில்லா ஆன்லைன் முன்பதிவு திட்டம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தாண்டு அக்டோபர் மாதத்தின் 2 ஆவது வாரத்திலேயே ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இணையதளம்: சபரிமலைக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம்.

இதற்கு அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட் கூப்பன் திட்டம் என பெயரிடப்பட்டு வெற்றிகரமாக இந்தாண்டும் தொடருகிறது.

முதல் கட்டமாக மண்டலப் பூஜை வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்பதிவை பெற்றுக்கொள்ளலாம். பின்பு, மகர விளக்கு பூஜைக்கு வருகை தரும் பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

எப்படி முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காகச் செல்லும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் வெர்ச்சுவல் கியூ கூப்பன் திட்ட இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை, பதிவு செய்த பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பா செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.

அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையை சோதனை செய்த பின்பு, பக்தர்களை பம்பாவில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதிப்பர். கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியை ஏறி சாமி தரிசனம் செய்து விடலாம்.

திட்டம் நீட்டிக்கப்படும்: இந்த கூப்பன் வசதி மூலம் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை முன்பதிவு வசதியைப் பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம், ஒரு மணி நேரத்தில்  ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது சிறப்பம்சம். கடந்தாண்டு இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments