தமிழக மீனவர்களின் 94 படகுகளை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்
இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் 94 படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் 94 படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக சிறையில் வாடிய 99 தமிழக மீனவர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 94 படகுகளைத் திருப்பி ஒப்படைக்கவில்லை. இது இலங்கை அரசின் நாடகத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது
Advertisement
இந்த நிலையில், இலங்கைக்கு படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் மத்திய அரசு வழங்க உள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மீனவர்களைச் சிறைபிடிக்கக் கூடாது என்று இலங்கையிடம் உறுதிபெற்ற பின்பே அந்த நாட்டுக்கு படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் வழங்க வேண்டும்.
மேலும், இலங்கை அரசிடம் உள்ள 94 படகுகளை உடனடியாக ஒப்படைக்குமாறு இலங்கை அரசை வலியுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.