முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுவிலக்கில் திமுக தினம் ஒரு நிலைப்பாடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கருணாநிதி கூறி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கருணாநிதி கூறி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 கருணாநிதி முதலில் மதுவிலக்கை கொண்டு வருவதாகக் கூறினார். அதன்பின்பு முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்குக்குதான் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் நாளே மதுவிலக்கு ஆணையில் கையெழுத்திடுவேன் என்று பேசினார். அங்கிருந்து தஞ்சாவூர் வருவதற்குள் நிலைப்பாட்டை மாற்றி சட்டம் இயற்றிதான் மதுவிலக்கை கொண்டு வருவோம். ஆட்சிக்கு வந்த 2-ஆம் நாளிலேயே சட்டம் இயற்றுவோம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக கருணாநிதி திரும்பத் திரும்பக் கூறியும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. திமுகவினர் யாரும் மது விற்பனை செய்ததும் கிடையாது என்று கூறியிருக்கிறார். திமுக  வேட்பாளர்களில் பலர் மது ஆலை உரிமையாளர்கள்தான். மதுவுடன் தொடர்புடைய திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாமக தயாராக உள்ளது.

  கடந்த 40 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த அதிமுகவும், திமுகவும் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →