முகப்பு
தற்போதைய செய்திகள்

தினமணி சார்பில் பன்ருட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தினமணி நாளிதழ் மற்றும் பன்ருட்டி செந்தமிழ் சங்கம் இணைந்து நடத்திய தேர்தல் விழுப்புணர்வு கையெழுத்து இயக்கம் பன்ருட்டி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

தினமணி நாளிதழ் மற்றும் பன்ருட்டி செந்தமிழ் சங்கம் இணைந்து நடத்திய தேர்தல் விழுப்புணர்வு கையெழுத்து இயக்கம் பன்ருட்டி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

பன்ருட்டி செந்தமிழ் சங்க பேரவைத் தலைவர் ச.ந.வைரக்கண்ணன் தலைமை வகித்தார். புறவலர் பொன் வேந்தன், துணைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் திரு.அய்யனார், நிர்வாக செயலர் ஆர்.செல்வன், முன்னிலை வகித்தனர்.

சங்க ஆலோசகர் சந்திரசேகர், வாழ்த்துரை வழங்கினார். கையெழுத்து இயக்கத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.மதியழகன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பன்ருட்டி வட்டாட்சியர் ஆர்.கீதா காவல் துறை கண்காணிப்பாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினர். இதில், ரோட்டரி சங்க தலைவர் பாண்டு, செந்தமிழ் சங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக ஆர்வலர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தல் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டனர்.

முன்னதாக செந்தமிழ் சங்க பொருளர் ஆ.ராஜா உறுதிமொழி வாசித்து முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஹரி ஆனந்த் நன்றிவுரை கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →