தற்போதைய செய்திகள்

தில்லியில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு

DIN

புதுதில்லி

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 54 ரயில்கள் மற்றும் 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

தில்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால், பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்கின்றனர். இதேபோல் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று 54 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை ஐ.ஆர்.சி.டிசி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதேபோல் 4 சர்வதேச விமானங்களும், 5 உள்ளூர் விமானங்களும் தாமதமாக இயக்கப்படும் என்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி-ஐதராபாத் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT