தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான விரிவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது: ராகுல் அதிரடி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான விரிவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

கவிதைமணி

புதுதில்லி

பிரதமர் நரேந்திர மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான விரிவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

இதுகுறித்து தில்லியில் பேசிய ராகுல் கூறியதாவது: -மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள்  என்னிடம் உள்ளது.  இதைத் நான் வெளிப்படுத்தினால், மோடியின் உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் தான், தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் என்னை பேச விடாமல் தடுப்பதாக  குற்றம்சாட்டினார்.

மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் மட்டும் பேச அச்சப்படுவதற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். ஊழல் தொடர்பான தகவலால் பிரதமர் மோடி பயத்தில் உள்ளார். மக்களவையில் பேச அனுமதித்தால் நான் மோடியின் ஊழல் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவேன் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT