முகப்பு
தற்போதைய செய்திகள்

கொடிநாள்: அதிகம் வசூலித்த அரசு துறைகளுக்கு பரிசளிப்பு கல்வித்துறைக்கு முதலிடம்

ராணுவ கொடிநாளை முன்னிட்டு அதிகம் வசூலித்த அரசுத் துறைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

புதுச்சேரி,

ராணுவ கொடிநாளை முன்னிட்டு அதிகம் வசூலித்த அரசுத் துறைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணுவ கொடி நாள் விழாவுக்கு முதல்வர் வி.நாராயணசாமி தலைமை தாங்கினார். கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா முன்னிலை வகித்தனர்.

கடந்த ஆண்டு கொடிநாளை முன்னிட்டு அதிகம் வசூலித்து சாதனை புரிந்த பல்வேறு அரசுத் துறைகளை பாராட்டி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிசளித்தார்.

மேலும் முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக புதுவை அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அவர் பாராட்டினார். அதிகம் கொடிநாள் வசூலிப்புக்காக முதல் 6 இடங்களுக்கான கேடயம் பெற்ற அரசுத் துறைகள்:

1. இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, 2, ஆட்சியர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, 3. இயக்குநர், உயர்கல்வித்துறை, 4. மாவட்ட ஆட்சியர், காரைக்கால், 5.பிராந்திய நிர்வாகி, மாஹே, 6, பிராந்திய நிர்வாகி, ஏனாம். முப்படைவீரர் நலத்துறை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.