முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வேண்டும் - சிஸ்மா வலியுறுத்தல்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவில் மாற்றும் கொண்டு வர வேண்டும், என்று தென்னிந்திய

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவில் மாற்றும் கொண்டு வர வேண்டும், என்று தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஸ்மா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ள கடித விவரம்:

மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததிலிருந்து சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் பெறும்  சரிவை சந்தித்து வருகின்றன. திருப்பூர் பின்னலாடை மாவட்டமானது வெளிமாநிலங்களை நம்பியே வர்த்தகம் நடத்தி வருகிறது.  

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களை நம்பி, அதை சார்ந்துள்ள வர்த்தகர்களும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் அன்றாட அறிவிப்பு வர்த்தகர்களை நிலைகுலையச் செய்கிறது.

இப்போது ரூ.5000-க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்துவதில் ரிசர்வ் வங்கி பல்வேறு வரைமுறைகளை தெரிவித்துள்ளது. கடந்த 40 நாள்களாக வங்களில் பணம் செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல், தற்போது திடீரென ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் துறையினர் வங்கிகளில் செலுத்திய பணத்தை எடுப்பதில் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும். வணிகர்கள், தொழில் துறையினருக்கு சம்பளம் மற்றும் பணபரிவர்த்தனைக்கு தேவைப்படும் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.ஓ.எஸ். இயந்திரங்களை அனைத்து வர்த்தகர்களுக்கும் இலவசமாக வழங்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டு விவகாரத்தை பொறுத்தவரை, வர்த்தக சரிவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவில் மாற்றம் கொண்டு வர வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →