முகப்பு
தற்போதைய செய்திகள்

சமையல் செய்தபோது விபரீதம்:  தீயில் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

திருச்சியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

திருச்சியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் உள்ள ராஜாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி மரியபஷல் (30). இவர்கள் இருவரும் கடந்த 2009-ம்ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்தனர், தற்போது இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இவர் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த போது, மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பிலிருந்து எண்ணெய் கொட்டி திடீரென தீப்பற்றியது. அந்த தீ மரியபஷல் உடலிலும் பற்றி எரிந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்த்தினர் மற்றும் குடும்பத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். செவ்வாய்க்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கன்டோன்மென்ட் மகளிர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →