விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் நாளை மறுநாள் வெள்ளி தேர் வெள்ளோட்டம்
விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை(பிப்,7) நடைபெறுகிறது.
கோயில் உள்பிரகாரத்தை சுற்றி வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெள்ளித்தேர் பணிக்காக உபயதாரர்கள் மற்றும் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கரிடம் இருந்து சுமார் 180 கிலோ வெள்ளி காணிக்கையாகப் பெறப்பட்டது.