முகப்பு
தற்போதைய செய்திகள்

உழவர்கரையில் ரூ.1 கோடியில் நகராட்சி திருமண மண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்

உழவர்கரை நகராட்சியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

உழவர்கரை நகராட்சியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

உழவர்கரை காளி கோயில் அருகில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உழவர்கரை நகராட்சி மூலம் சுமார் ரூ.1 கோடி செலவில் உழவர்கரை நகராட்சி திருமண மண்டபம் கட்டப்பட்டது.

இதனை முதல்வர் ரங்கசாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உழவர்கரை தொகுதியின் எம்.எல்.ஏவும், அமைச்சருமான  என்.ஜி.பன்னீர்செல்வம்  தலைமை தாங்கினார்.

நகராட்சி ஆணையர்  ரமேஷ், முதுநிலை பொறியாளர் குணசேகரன், இளநிலை செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.