தற்போதைய செய்திகள்

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தனியார் நிறுவன ஊழியர் சாவு 

மேம்பாலத்தில் இருந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.  கரூர் எல்பிஜி நகரை சேர்ந்தவ

பெ. விஜயபாஸ்கர்

மேம்பாலத்தில் இருந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.  கரூர் எல்பிஜி நகரை சேர்ந்தவர் ராமசாமி(70). கரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முகவராக பணியாற்றி வந்தார்.

 இவர் வெள்ளிக்கிழமை மதியம் கரூரில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றார். இந்த கார் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே நல்லிகவுண்டன்புதூர் என்ற இடத்தில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயர பாலத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீஸார் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT