முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் பிறந்தநாள்: மகளிர் அணி சார்பில் 1068 பால்குடம் எடுத்து வழிபாடு

விருதுநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, 1068 பால்குடம் எடுத்து, ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

விருதுநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, 1068 பால்குடம் எடுத்து, ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்குரதவீதியில், கட்சியின் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கௌரி நாகராஜன், துணைச் செயலாளர் மீராதனலட்சுமி முருகன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 1068 பால்குடம் எடுக்கும் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று ஸ்ரீஆண்டாள் கோவிலில் நிறைவு பெற்றது. அங்கு ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர்கள் வசந்தி முருகேசன் (தென்காசி), ராதாகிருஷ்ணன் (விருதுநகர்), கட்சியின் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.ஆர்.ராஜவர்மன், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி உள்ளிட்ட ஏராளானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →