முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான நீச்சல் போட்டி

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டிகள் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அருணா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முதல் அணியில் 16 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் போட்டியில் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா கான்வென்ட் பள்ளியின் பி.ஹரி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இரண்டாவது அணியில் 14 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான போட்டியில் விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியின் பி.எஸ்.ஹரிபிரசாந்த் மற்றும் மூன்றாவது அணியில் 12-வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான போட்டியில் விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியின் எஸ்.அச்சுதனும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை இயக்குநர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நீச்சல் கழகத்தின் தலைவர் சரவணன், பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர்கள் விஜயலட்சுமி, செல்வகணேஷ், நீச்சல் பயிற்சியாளர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட நீச்சல் கழகச் செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →