முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.1100-க்கு வாங்கிய செல்போன் பழுது: புதிய செல்போனை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க உத்தரவு

ரூ.1100-க்கு வாங்கிய  செல்போன் வேலை செய்யாமல் போனதால், பாதிக்கப்பட்டவருக்கு புதிய செல்போன் தர வேண்டும். அல்லது அதற்கான தொகையை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத்

தற்போதைய செய்திகள்

ரூ.1100-க்கு வாங்கிய செல்போன் பழுது: புதிய செல்போனை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க உத்தரவு

ரூ.1100-க்கு வாங்கிய  செல்போன் வேலை செய்யாமல் போனதால், பாதிக்கப்பட்டவருக்கு புதிய செல்போன் தர வேண்டும். அல்லது அதற்கான தொகையை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ரூ.1100-க்கு வாங்கிய  செல்போன் வேலை செய்யாமல் போனதால், பாதிக்கப்பட்டவருக்கு புதிய செல்போன் தர வேண்டும். அல்லது அதற்கான தொகையை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் செல்போன் விற்பனை நிலையம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், காட்டு புதுத்தெருவைச் சேர்ந்தவர் ந.மீனாட்சிசுந்தரம். இவர் கோயமுத்தூருக்கு 7.4.2014-ம் தேதி சென்றுள்ளார். அப்போது காந்திபுரம் 7-வது வீதி விரிவாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் விற்பனை நிலையத்தில் ரூ.1100-க்கு செல்கான் சி 366 என்ற செல்போனை வாங்கிவிட்டு ஊர் திரும்பியுள்ளார். அது மறுநாளிலிருந்து வேலை செய்யவில்லையாம். 12.5.14-ம் தேதி மீண்டும் கோயமுத்தூருக்கு குறிப்பிட்ட கடைக்குச் சென்று சரி செய்து தரக் கூறியுள்ளார்.

அவர்கள் வாடிக்காளர் சேவை மையத்தில் கொடுக்கக் கூறியுள்ளார்கள். அது பூட்டி இருக்கவே மீண்டும் கடைக்கு வந்து கேட்டுள்ளார். அங்கிருந்த மேலாளர் மற்றும் ஊழியர்கள் கடையிலிருந்த வாடிக்கையாளர்கள் முன்னிலையில் மீனாட்சிசுந்தரத்தை அவமானமாகப் பேசினார்களாம். இதனால் மனஉளைச்சல், மனவேதனை, பணவிரையம், கால விரையம், விண் அலைக்கலைப்பு ஏற்பட்டதாயும், இதற்கு இழப்பீடு கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மீனாட்சிசுந்தரம் மனு தாக்கல் செய்தார்.

மனு விசாரணை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.இறுதியாக பூர்விகா மொபைல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செல்கான் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சேவையில் குறைபாடு உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

மேலும் செல்போன் இயங்கவில்லை என்பதை விற்பனை நிறுவனம் மறுக்கவில்லை. எனவே பழுதான செல்போனை பெற்றுக் கொண்டு புதிய செல்போன் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கான விலை ரூ.1100-யைத் திரும்ப வழங்க வேண்டும். மேலும் மனஉளைச்சல், மனவேதனைக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகையை பூர்விகா மொபைல் நிறுவனம் மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →