இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரித்து பெருமை சேர்த்த மத்திய அரசு, அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து நாடு முழுவதும் அதனைப் பரப்ப வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவின் 107-வது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போதைய செய்திகள்இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரித்து பெருமை சேர்த்த மத்திய அரசு, அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து நாடு முழுவதும் அதனைப் பரப்ப வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவின் 107-வது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரித்து பெருமை சேர்த்த மத்திய அரசு, அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து நாடு முழுவதும் அதனைப் பரப்ப வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவின் 107-வது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழகப் புலவர் குழுவின் 107-வது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மா.சுப்புராஜ் வரவேற்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தொன்மைச் சிறப்பு மிக்க தமிழகப் புலவர் குழுக் கூட்டங்களை நடத்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பிற மொழி அறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
சரியான தலைமையின்றியும், செயல்பட வழிகாட்டுதல் இல்லாமலும் தடுமாறும் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் சிறப்பாகச் செயல்பட தமிழகப் புலவர் குழு போன்ற தமிழ் அமைப்புகளின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெற்று செயல்பட மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள், வேள்விகள், சமயச் சடங்குகள் உள்ளிட்டவை தமிழ் மொழியில் நடைபெற வேண்டும்.ஊடங்கள், பத்திரிக்கைகளில் தமிழ் சொற்கள் தவிர்த்தலும், பிற மொழிச் சொற்களைச் திணித்தலும் தொடர்வதை தமிழக புலவர் குழு கண்டிக்கிறது. மொழி வளர்ச்சிக்கு ஆதாரமான ஊடங்களும், பத்திரிக்கைகளும் தங்கள் மொழிப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பெற வேண்டும். மேற்படிப்பு, பிற நுழைவுத் தேர்வுகளுக்கும் தமிழ்ப் பாட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.திருவள்ளுவர் திருநாளன்று தமிழறிஞர்கள் பெயரால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாக மறைமலை அடிகளாரின் பெயரிலும் விருது ஒன்றை நிறுவி தனித் தமிழுக்குத் தொண்டாற்றி வரும் தமிழ அறிஞர்க்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள்: தமிழக புலவர் குழுவின் தலைவராக சிலம்பொலி முனைவர் சு.செல்லப்பன், துணைத் தலைவர்களாக முனைவர் ஔவை நடராஜன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளராக முனைவர் மறைமலை இலக்குவனார், துணைச் செயலாளராக ஸ்ரீகாந்த் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக நீதிபதி தி.ந.வள்ளிநாயகம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், புலவர் கருமலைத் தமிழாழன், புலவர் இளங்கீரன், கவிஞர் பொன்னடியான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பொறுப்பாண்மைக் குழுவின் தலைவராக மணிமேகலை கண்ணன், செயலாளராக கி.ஆ.பெ.வி.கதிரேசன், பொருளாளராக சிவ தமிழ்ச்செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் ஏராளான தமிழ் புலவர்கள் கலந்து கொண்டனர்.