முகப்பு
தற்போதைய செய்திகள்

கண்மாயில் கிராவல் மண் திருட்டு: 7 பேர் கைது: 6 வாகனங்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் கிராவல் மண் திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மண் திருட்டிற்கு பயன்படுத்தி 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.வன்னியம்பட்டி விலக்கு தொடங்கி சத்திரப்பட்டி சாலை முடியும் வரை சித்தர்குளம் கண்மாய் உள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் கிராவல் மண் திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மண் திருட்டிற்கு பயன்படுத்தி 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.வன்னியம்பட்டி விலக்கு தொடங்கி சத்திரப்பட்டி சாலை முடியும் வரை சித்தர்குளம் கண்மாய் உள்ளது.

இங்கு அரசு அனுமதிக்கப்பட்ட குவாரி இடம் உள்ளது. குவாரி மேற்பார்வையாளராக விருதுநகர் முல்லைநகர் ச.ஜனார்த்தனன் (55) என்பவர் உள்ளார். இந்த குவாரியில் அளவுக்கதிகமாக மண் எடுக்கப்படுவதாயும், ஒதுக்கப்படாத கண்மாயில் கிராவல் மண் திருடி எடுக்கப்படுவதாயும் தொடர்ந்து புகார் வந்தது. இதன் பேரில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அழகர்சாமி, மற்றும் வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை இந்த இடத்தை திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு அலுவலர்களை, மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மிரட்டும் வகையில் நடந்து கொண்டாராம். மேலும் அரசு விதிமுறைகளை மீறி அத்துமீறி சென்று இங்கு மண் திருடி, கண்மாயை சேதப்படுத்திக் கொண்டிருந்துள்ளார்கள்.இந்த திருட்டில் ஈடுபட்ட இரு ஜேசிபி இயந்திரங்கள், 3 டிராக்டர், ஒரு டிப்பர் லாரி மற்றும் 7 யூனிட் மண் பறிமுதல் செய்யப்பட்டது.

பொறியாளர் அழகர்சாமி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குவாரி மேற்பார்வையாளர் ச.ஜார்த்தனன், டிரைவர்கள் தேசிகாபுரம் கு.மதன்ராஜ் (30), ச.பால்ராஜ் (30), மங்காபுரம் மேல்பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரா.மணிமலையன் (24), சீ.ராகவன் (35), இ.மாரிக்கனி (24), அத்திகுளத்தைச் சேர்ந்த மு.முனியசாமி (31) ஆகியோரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →