தாணே: பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த மார்ச் 22-ம் தேதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழக மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தூதரகம் நேற்று அறிவித்தது.
இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னையில் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.