முகப்பு
தற்போதைய செய்திகள்

இரண்டாம் உலகப்போர் நினைவு நாள் புதுவையில் அனுசரிப்பு

இரண்டாம் உலகப் போர் முடிந்த 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

இரண்டாம் உலகப் போர் முடிந்த 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததின் 71-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர் வீரர் நினைவு சின்னத்தில் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் பிரான்சு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதர் அதிகாரி பிலிப் ஜான்வீர் காமியாமா மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி.ஜவஹர் ஆகியோர் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.