முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவில் தீ மிதித்து நேர்த்திக் கடன்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரை 8-ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலில் நூற்றுக்கணக்காண பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரை 8-ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலில் நூற்றுக்கணக்காண பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

ஆண்டு தேறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு, கடந்த மே, 3-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது,  தினமும் காலை, மாலைகளில் அம்பாள் திருவீதி உலா வந்து காட்சியளித்தார். விழாவின் 8-ம் நாளான செவ்வாய்க்கிழமை, கோயில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் (தீ குண்டம்) நூற்றுக்கணக்காண பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டி, அங்கப்பிரதட்சிணம், பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 9- ம் விழாவான புதன்கிழமை(மே 11) ஆடு, கோழி பலியிடுதல், மாலையில் படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்பர் எனக் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.