நாகை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி 2 தொகுதிகளில் முன்னிலை
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
ஒரு தொகுதியில் திமுக வென்றுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பூம்புகார், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
கீழ்வேளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் உ. மதிவாணின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாகை, சீர்காழி ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. நாகப்பட்டினம் : நாகை தொகுதியின் 13-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக (மஜக) வேட்பாளர் எம். தமிமுன் அன்சாரி 16,919 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
வாக்குகள் விவரம் : எம். தமிமுன் அன்சாரி (அதிமுக)- 53,312. எம். ஜபருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)- 36,393. சீர்காழி (தனி) : சீர்காழி தொகுதியின் 15-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி 55,673 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் கிள்ளை எஸ். ரவீந்திரனை விட 5,809 வாக்குகள் முன்னிலைப் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் கிள்ளை எஸ். ரவீந்திரன் 49,874 வாக்குகள் பெற்றார்.