முகப்பு
தற்போதைய செய்திகள்

சுய உதவிக் குழு பெண்களிடம் மோசடி: விராலிமலை காவல் நிலையத்தில் பெண் புகார்

விராலிமலையில் சுய உதவிக் குழு பெண்களிடம் வட்டியில்லா கடன் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விராலிமலை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:22 PM
பகிர்:

விராலிமலையில் சுய உதவிக் குழு பெண்களிடம் வட்டியில்லா கடன் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விராலிமலை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விராலிமலை அருகேயுள்ள முல்லையூரைச் சேர்ந்த போதும்பொண்ணு, விராலிமலை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை, இதுகுறித்து அளித்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே அருகே இயங்கி வரும் சுபயோகம் நிதி பவுண்டேசன் நிறுவன இயக்குநர் உதயகுமார் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பாளர் விராலிமலை சோதனைச் சாவடி அருகேயுள்ள சித்ரா என்பரும் விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இயங்கி வரும் சுய உதவிக்குழு நடத்தும் பெண்களிடம் வட்டியில்லாத கடன் பெற்று தருவதாக கூறி 593 பெண்களிடம், தலா ரூ.400, வீதம்  மொத்தம் ரூ.2. 37 லட்சம் வசூல் செய்ததாகவும் பின்னர் கடன் பெற்றுத்தராமல் நாள்களை கடத்தி வருவதோடு சரியான பதில் அளிக்காமல் தலைமறைவாகி விட்டதாகவும் விராலிமலை காவல் நிலையத்தில் போதும்பொண்ணு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.