முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பங்கேற்பில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அதன் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் புதுவையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:36 PM
பகிர்:

புதுச்சேரி,

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அதன் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் புதுவையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தலாகும். இத்தொகுதியில் தொடக்கம் முதல் பெருமளவில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

எங்கள் கட்சியின் பிரதேசக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நெல்லித்தோப்பு தேர்தல் குறித்து முழுமையாக விவாதித்தோம். ஜனநாயகம் கேலிக்கூத்து

இடைத்தேர்தலை முன்னிட்டு பணம், பொருள் விநியோகம் தடையின்றி நடக்கிறது. ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் நடக்கிறது. தேர்தல் ஆணையம் எதையும் கண்டு கொள்ளாமல் மௌனமாக உள்ளது.

மக்கள் நலக்கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த விரும்பினோம். தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசினோம். ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தருவது குறித்து அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

எனினும் பண பலம், அதிகார பலத்தோடு காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் பங்கேற்கவில்லை. எந்த வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். இது புதுச்சேரி வளர்ச்சிக்கு பாதகத்தை  ஏற்படுத்தும்

காங்கிரஸ் கட்சி தான் புதிய பொருளாதார கொள்கையை நாட்டில் அறிமுகம் செய்தது.  அதனால் அவர்களுக்கு ஆதரவு தரும் பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் ஊழலில் திளைத்து வரும் அதிமுகவுக்கும் ஆதரவு தரப்படவில்லை. 

காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு பொதுவாக ஆதரவு தருவதில்லை முடிவு செய்துள்ளோம்.தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், பணபலத்தை பொதுமக்கள் முறியடிக்க வேண்டும். இந்த நடைமுறையை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும். இத் தேர்தல் கட்சி, கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி இல்லை. பணத்துக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

இடைத் தேர்தல் முடிந்த பின் மக்கள் நலக்கூட்டணி தொடருவது குறித்து கலந்து பேசி அறிவிக்கப்படும் என்றார் பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.