முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் மாநில வில் வித்தை போட்டிகள் தொடக்கம்: 60 பேர் பங்கேற்பு

புதுச்சேரி மாநில வில்வித்தை சங்கம் சார்பில் முதலாவது மாநில அளவிலான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

புதுச்சேரி, 

புதுச்சேரி மாநில வில்வித்தை சங்கம் சார்பில் முதலாவது மாநில அளவிலான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

புதுச்சேரி வில்வித்தை விளையாட்டுச் சங்கத்துக்கு இந்திய வில்வித்தை சங்கத்தின் அங்கீகாரம் அண்மையில் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக முதலாவது மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள் நடத்தப்படுகின்றன. வீரர்களுக்கு பயிற்சி அளிக்க சங்கத்தின் தலைமை பயிற்சியாளராக ஷிஹான் ஹூசைனி நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலாவது மாநில வில் வித்தை போட்டியில் 12 பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெறும். புதுவை, காரைக்காலைச் சேர்ந்த 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாசவி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி வி.நாகராஜன், சங்கத் தலைவர்ராஜராஜன், பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தார். சங்கப் பொதுச் செயரர் அஷ்வின்குமார் முன்னிலை வகித்தார்.

போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் ஷிஹான் ஹூசைனி கூறியதாவது:

இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய போட்டிகளுக்கு புதுவை மாநிலம் சார்பில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர். வரும் 11-16-ம் தேதிகளில் திருப்பதியில் நடைபெறும் தேசிய மினி சப்ஜூனியர் போட்டிகள், சென்னையில் டிசம்பர் 26-30-ம் தேதி வரை நடக்கவுள்ள தேசிய சீனியர் போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வர். இதே போல் தேசிய சப்ஜூனியர், ஜூனியர் போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிலும் கலந்து கொள்வர்.

தேசிய போட்டிகளுக்கு தகுதி பெறும் வீரர்களுக்கு பெத்திசெமினார் பள்ளி மைதானத்திலியே உடனே காலை, மாலை இரு வேளைகளும் பயிற்சி தரப்படும் என்றார் ஹூசைனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.