நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
கிழக்கு காத்மாண்டில் இன்று அதிகாலை 5.05 மணியளவில் சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் மலைப்பகுதியை ஒட்டியுள்ள சொழுக்கும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு கிழக்கு காத்மாண்டுக்கு 150 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக நேபாள் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள 475-வது நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் மிதமாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
காத்மாண்டு, மத்திய மற்றும் கிழக்கு நேபால் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.