தற்போதைய செய்திகள்

துருக்கி பள்ளி விடுதியில் பயங்கர தீ: 11 மாணவிகள் உடல் கருகி சாவு

துருக்கியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவிகள் உள்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

DIN

அங்காரா: துருக்கியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவிகள் உள்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தென் துருக்கி மாகாணத்தின் அதானாவில் இருக்கும் பள்ளி விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதியில் இருந்த மாணவிகளில் 11 பேர் மற்றும் விடுதி காப்பாளராக பணிபுரிந்த பெண் உட்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அந்த விடுதியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவிகள் 34 பேர் தங்கியிருந்துள்ளனர். தீ விபத்தில் குறைந்தது 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மின் கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுதியில் இருந்து இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதியின் தீயை தொலைக்காட்சி ஒளிப்பரப்பை காட்சியை வைத்து அருகில் இருந்து பல மாடி கட்டிடத்தின் வழியாக தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து நடந்த இடத்தை துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோயல், துணை பிரதமர் வெய்சி காய்னக் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் சூரசம்ஹாரத்துக்கு கள்ளச்சந்தையில் சிறப்பு வாகன அனுமதி அட்டை: காவல் துறை மறுப்பு

உண்ணாமலைக்கடையில் இந்து இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்: 96 போ் கைது

வாக்காளா் பட்டியல் திருத்த ஆலோசனைக்கூட்டம்: திமுக, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கன்னியாகுமரி வருகை

நாகா்கோவிலில் இன்று விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

SCROLL FOR NEXT