தற்போதைய செய்திகள்

கேரள மருத்துவ கல்லூரியில் லெகிங்ஸ், ஜீன்ஸ், டி-ஷர்ட்க்கு தடை

DIN

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்த்தியான, சுத்தமான உடைகளையே மாணவர்கள் அணிந்துவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பேன்ட், ஷர்ட், ஷூ அணிந்தும், மாணவியர் சுடிதார் அல்லது சேலை அணிந்தும் அடையாள அட்டையுடன் வெள்ளைநிற கோட்களை அணிந்தும் வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவைதவிர வேறுவகை உடை அணிந்து மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வளையல், கொலுசு போன்ற ஓசை எழுப்பும் பொருட்களையும் பயன்படுத்த கூடாது என்று வெளியாகியுள்ள இந்த உத்தரவுக்கு மாணவ-மாணவியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT