தற்போதைய செய்திகள்

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக் கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

DIN

வேலூர், 

அதிக ஒலி எழுப்பும் எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஒலி, மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் தண்ணீர், மணல் வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகள், சுற்றுப்புற காற்று மாசுபடுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்படும் பட்டாசுகள், அவற்றில் அடங்கியுள்ள வேதிப்பொருள், அவை வெடிக்கும் போது ஏற்படும் ஒலி, மாசு அளவுகள் குறித்த தகவல் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.

அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. விற்பனை செய்யப்படும் கடைகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்திருப்பதுடன், விதிமுறைகளுக்கு உள்பட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய வேண்டும்.

பாதுகாப்புடன், மாசற்ற முறையில் தீபாவளி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT