தற்போதைய செய்திகள்

தாராபுரம் அருகே பேருந்து மோதி விவசாயி பலி

தினமணி

தாராபுரம் அருகே சைக்கிளில் சென்ற விவசாயி பேருந்து மோதியதில் இன்று  உயிரிழந்தார்.

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் ராமபட்டிணத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன்(52), விவசாயி. இவர் இன்று தாராபுரம் வந்து விவசாயப்பணிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காளிபாளையம் அருகே எதிரே வந்த தனியார் பேருந்து விவசாயி கண்ணியப்பன் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனர் ஜெயராமை கைது செய்து விவசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மசூதி மீது அம்பு விடப்பட்ட சம்பவம்: ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை!

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

SCROLL FOR NEXT