தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

DIN

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்மூலம் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையை 3 மாதங்கள் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீட்டர் வரை பெய்யும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்த வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் திருவையாறில் 7 செ.மீட்டர் மழையும், தொழுதூர், வலங்கைமானில் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு சராசரியாக 67 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 23 செ.மீட்டர் அதிகமாகும். சதவீத அளவை பார்க்கும் போது 55 சதவீதம் கூடுதலாகும். சென்னையில் சராசரியாக 78 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 160 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 104 சதவீதம் அதிகமாகும். என்று கூறினார்.

சென்னையில் இன்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பருவமழை தொடங்கியதால் வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது. .

தமிழத்தில் தென்மேற்கு பருவமழையும் சரிவர பெய்யாததால் மூன்று போகம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தற்போது ஒரு போகம் மட்டுமே சம்பா நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த ஒரு போகத்திற்கும் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து நிலையில், தமிழக விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவருகின்றன. இதையடுத்து வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ள விவசாயிகளின் மனதில், பருவமழை இன்று முதல் துவங்கும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT