முகப்பு
தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்றம் மூலம் காவிரி நீர் - தமிழக முதல்வருக்கு பாராட்டு

உச்சநீதிமன்றம் மூலம் காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

உச்சநீதிமன்றம் மூலம் காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகர அதிமுக செயலர் ஜி.வி.ஜெயபால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது :  காவிரியை நம்பி டெல்டா மாவட்டங்கள் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டமும் காவிரியை நம்பி விவசாயம் செய்யக்கூடிய பகுதியாகும்.
காவிரித் தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லையென கர்நாடகம் பிடிவாதமாக இருந்த நிலையில், தமிழக முதல்வர், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக சாமர்த்தியமான முறையில் உச்சநீதிமன்றத்தை அணுகி, தமிழகத்தில் சம்பா நிலை, காவிரியை எதிர்நோக்கி இருப்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.
தமிழகத்தின் நிலையை உணர்ந்த உச்சநீதிமன்றம், தினமும் 15 ஆயிரம் கன அடி காவிரித் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கர்நாடகம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள், சம்பா பருவத்தில் நல்ல முறையில் விளைச்சல் காண முடியும்.
தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையின் மூலம் காரைக்கால் பிராந்தியமும் பயனடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விவசாயிகளின் உணர்வை புரிந்து நடவடிக்கை எடுத்து, வெற்றிகண்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →