தற்போதைய செய்திகள்

ராம்குமார் தற்கொலை: சிறைத்துறை விளக்கம்

சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார்(26) சிறையில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிரிழந்ததாக சிறைத்துறை விளக்கம்

தினமணி

சென்னை: சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார்(26) சிறையில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிரிழந்ததாக சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைதுசெய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புழல் சிறையில் மின்சாரம் பாந்துகொண்டிருந்த கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.

ராம்குமாரின் தற்கொலை தொடர்பாக சிறைத் துறை வட்டாரங்கள் கூறுகையில், சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார் இன்று மாலை 4.45 மணி அளவில் தற்கொலைக்கு முயன்றார். சிறை சமையல் அறைக்கு வெளியில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்துள்ளார். மின் வயரை உடலிலும் செலுத்தியுள்ளார். இதை அறிந்ததும், ராம்குமாருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து உயர்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT