தற்போதைய செய்திகள்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போனை விமானப் பயணத்தின் போது பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 

DIN

சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போனை விமானப் பயணத்தின் போது பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போனை பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், அதனை ஆஃப் செய்துகொண்டு பயணிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் பயணிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. விமானத்தில் சார்ஜ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாம்சங் நிறுவனம் அந்த வகை செல்போன்களை  திரும்பப்பெற்றுக் கொண்டு பேட்டரிகளையும் மாற்றி வழங்கியுள்ளது. தற்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி நோட் 7 செல்போன் பச்சை நிற பேட்டரி ஐக்கானுடன் உள்ளதா என கவனித்து வாங்க வாடிக்கையாளர்களை சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT