முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

சென்னை:  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார். பின்னர் சட்டப்பேரவை செயலாளர் ஜாமாலுதீனை விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசினார்.

முதல் அமைச்சருடனான சந்திப்பு வழக்கமான ஒன்றுதான். மருத்துவ இடஒதுக்கீடு குறித்து முதல் அமைச்சருடன் பேசியதாகவும், இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளரை சந்தித்துப் பேசியதாகவும், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தம்பிதுரை பேசினார். தம்பிதுரை சந்தித்து திரும்பியதும், எடப்பாடி பழனிச்சாமியை விஜயபாஸ்கர் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →