தற்போதைய செய்திகள்

அஜித்குமார் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது: வழக்கறிஞர் அறிவிப்பு

DIN

நடிகர் அஜித்குமார் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று அவரது சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ நடிகர் அஜித் அங்கீகரிக்கவில்லை.

எந்த ஒரு வணிக சின்னம், பொருள், நிறுவனம், அமைப்புக்கும் அஜித் விளம்பரதூதர் இல்லை என்றும் அவர் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது  என்றும் தெரிவித்துள்ளார். 

தனது அனுமதியின்றி நடைபெறும் தகாத விமர்சனங்களால் நடிகர் அஜித் மன உளைச்சல் அடைந்துள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT