தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு:  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

DIN

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் கோபியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: - மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும்.  

சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை செல்போனில் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.

இந்த ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும்  கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT